Que: what is maturity according to islam? Ans: Asslamu alaikkum warahmatullahi wabarakathuh............................... According to islam, maturity is when something happens or happening or happened we should remain calm and tell your soul that Allah almighty is testing me, I should be calm, and I'll never let the shaitaan to rule ... Say this INNALLAHA MAASSABIREEN...... jazakallu khair..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கேள்வி : என்னதான் உலமாக்கள் ஆலிம்கள் சொன்ன அமல்கள் செய்தாலும் பலன் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆகிறதே ஏன்? (திருவண்ணாமலை இலிருந்து பாத்திமா என்பவரின் கேள்வி ) பதில் : இது ஒரு நல்ல கேள்வி, ஒரு வேலை நீங்கள் செல்வம் பெறுக (அல்லது )ஏதாவது (மனதில் நினைத்த) காரியம் கைகூட உலமக்களிடமோ, அல்லது ஆலிம்களிடமோ அமல் கேட்டு செய்து கொண்டு இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம் (உதாரணத்திற்கு மட்டுமே யார் மனதையும் புண் படுத்த அல்ல ) அந்த அமல் செய்து இரவு தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் தலையணையின் கீழ் கட்டு கட்டாக பணம் இருக்குமா? (அல்லது) இரவோடு இரவாக அந்த செயல் கைகூடி விடுமா?..அப்படி இல்லை... ஐவேளை தொழுகையை தவறாமல் தொழுது வர வேண்டும், உடன் ஆலிம்கள், உலமாக்கள் சொன்ன அமலையும் செய்து வர வேண்டும்.. அல்லாஹுத்தஆலா குரானில் கூறுகிறான்.. ""தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் உதவி தேடுங்கள்"" என்று, இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நமக்கு எந்த சூழலிலும் தொழுகையை விடாமல், எல்லா சூழலிலும் பொறுமை காக்க அருள் புரிவானாக... ஆமீன்..... பின்குறிப்பு : வாசகர்களிடம் இருந்து கேள்விகள் வரவேற்கப்படுகிறது.... கமெண்ட் - இல் உங்கள் கேள்விகளை பதிவிடலாம்....

கேள்வி : ஸலவாத் ஓதுவதின் நன்மைகள் என்ன? பதில் : நபி (ஸல் )அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி ) கூறுகிறார்கள், எவர் ஒருவர் ஒரு முறை ஸலவாத் ஓதுகிறாரோ, 01. அவருடைய பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. 02.அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகிறது. 03.அவருடைய அந்தஸ்து பத்து உயருகிறது. மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது எந்த அடியான் அண்ணல் நபி (ஸல் )அவர்கள் மீது ஸலவாத் ஓதுகிறாரோ, அந்த அடியான் மீது அல்லாஹுத்தஆலா ஸலவாத் ஓதுகிறான் (சுப்ஹானல்லாஹ் ) அதிகம் அதிகம் ஸலவாத் ஓத அல்லாஹுத்தஆலா நமக்கு தொளபீக் செய்வானாக................ ஆமீன்...

கேள்வி : வறுமை மற்றும் பலா முஸீபத் நீங்க என்ன செய்ய வேண்டும்? பதில் : ஐவேலை தொழுகை தவறாமல் கடைபிடிக்க வேண்டும், என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று... அதனுடன் சேர்த்து காலை மாலை (இரு வேலையும் தவறாமல் ஓதி வரவும் )மன்ஜில் மற்றும் யாசீன் ஓதி துஆ கேட்டு வரவும்... என்னிடம் கேட்ட சில பேருக்கு இதை தான் கூறினேன், 40நாட்களிலே கண்கூடான பலன் கிடைத்தது என்று கூறினார்கள்... இன்ஷாஅல்லாஹ் நீங்களும் கடைபிடியுங்கள், இன்ஷாஅல்லாஹ் உங்கள் வறுமை மற்றும் பலா முஸீபத் நீங்க அல்லாஹ் வழி செய்வான்..