இடுகைகள்

கேள்வி : என்னதான் உலமாக்கள் ஆலிம்கள் சொன்ன அமல்கள் செய்தாலும் பலன் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆகிறதே ஏன்? (திருவண்ணாமலை இலிருந்து பாத்திமா என்பவரின் கேள்வி ) பதில் : இது ஒரு நல்ல கேள்வி, ஒரு வேலை நீங்கள் செல்வம் பெறுக (அல்லது )ஏதாவது (மனதில் நினைத்த) காரியம் கைகூட உலமக்களிடமோ, அல்லது ஆலிம்களிடமோ அமல் கேட்டு செய்து கொண்டு இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம் (உதாரணத்திற்கு மட்டுமே யார் மனதையும் புண் படுத்த அல்ல ) அந்த அமல் செய்து இரவு தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் தலையணையின் கீழ் கட்டு கட்டாக பணம் இருக்குமா? (அல்லது) இரவோடு இரவாக அந்த செயல் கைகூடி விடுமா?..அப்படி இல்லை... ஐவேளை தொழுகையை தவறாமல் தொழுது வர வேண்டும், உடன் ஆலிம்கள், உலமாக்கள் சொன்ன அமலையும் செய்து வர வேண்டும்.. அல்லாஹுத்தஆலா குரானில் கூறுகிறான்.. ""தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் உதவி தேடுங்கள்"" என்று, இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நமக்கு எந்த சூழலிலும் தொழுகையை விடாமல், எல்லா சூழலிலும் பொறுமை காக்க அருள் புரிவானாக... ஆமீன்..... பின்குறிப்பு : வாசகர்களிடம் இருந்து கேள்விகள் வரவேற்கப்படுகிறது.... கமெண்ட் - இல் உங்கள் கேள்விகளை பதிவிடலாம்....

கேள்வி : ஸலவாத் ஓதுவதின் நன்மைகள் என்ன? பதில் : நபி (ஸல் )அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி ) கூறுகிறார்கள், எவர் ஒருவர் ஒரு முறை ஸலவாத் ஓதுகிறாரோ, 01. அவருடைய பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. 02.அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகிறது. 03.அவருடைய அந்தஸ்து பத்து உயருகிறது. மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது எந்த அடியான் அண்ணல் நபி (ஸல் )அவர்கள் மீது ஸலவாத் ஓதுகிறாரோ, அந்த அடியான் மீது அல்லாஹுத்தஆலா ஸலவாத் ஓதுகிறான் (சுப்ஹானல்லாஹ் ) அதிகம் அதிகம் ஸலவாத் ஓத அல்லாஹுத்தஆலா நமக்கு தொளபீக் செய்வானாக................ ஆமீன்...

படம்

கேள்வி :சுப்ஹானல்லாஹ் கூறுவதின் நன்மை என்ன? பதில் : நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஸஹீஹுல் முஸ்லீம் புத்தகத்தில் உள்ள பதிவு, எவர் ஒருவர் 100 முறை சுப்ஹானல்லாஹ் கூறுவாரோ அவரின் ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப்படும், மற்றும் ஆயிரம் நன்மைகள் எழுதப்படும்.... நேரம் கிடைக்கும் போது எல்லாம் அல்லாஹ்வை திக்ர் செய்து கொண்டே இருப்போம், இன்ஷாஅல்லாஹ்...

படம்

கேள்வி : நாம் செய்யும் எல்லா அமல்களும் ஏற்றுக்கொள்ளப்பட என்ன செய்ய வேண்டும்? பதில் : நாம் செய்யும் எல்லா அமல்களும் ஏற்று கொள்ளப்பட முதலில் தரவறாமல் ஐவேளை தொழுகையும் அதற்கான வக்த் தில் தொழ வேண்டும்... அதாவது, நம்மில் பலர் கல்யாணம் அல்லது பயணம் போன்றவற்றில் ஈடுபடும் போது சில தொழுகைகளை விட்டுட்டு களா செய்கிறோம்.. இன்னும் சிலர் களா கூட தொழுவது இல்லை... அது போல இல்லாமல், ஐவேளை தொழுகைகளை அதற்குரிய வக்த் தில் தவறாமல் தொழும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.. ஐவேளை ஹதீஸ் ஸில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவெனில், ஐவேளை தொழுகை தொழாதவர்களின் துஆ கபூல் ஆகாது மற்றும் [மற்றவர்களிடம் துஆ செய்யுமாறு கேட்டால் ]நல்லவர்களின் துஆ விலும் அவர்களுக்கு பங்கு இருக்காது. அதாவது, நல்லவர்கள் (ஐவேளை தொழுகை தொழாதவர்களுக்காக )செய்யும் துஆ கபூல் ஆகாது.... இன்ஷாஅல்லாஹ் இக்கணம் முதல் வாழ்நாள் வரை நம் அனைவருக்கும் அல்லாஹ் தாலா ஐவேளை தொழுகை நேரம் தவறாமல் தொழ அருள்புரிவானாக... ஆமீன்.....

கேள்வி : வறுமை மற்றும் பலா முஸீபத் நீங்க என்ன செய்ய வேண்டும்? பதில் : ஐவேலை தொழுகை தவறாமல் கடைபிடிக்க வேண்டும், என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று... அதனுடன் சேர்த்து காலை மாலை (இரு வேலையும் தவறாமல் ஓதி வரவும் )மன்ஜில் மற்றும் யாசீன் ஓதி துஆ கேட்டு வரவும்... என்னிடம் கேட்ட சில பேருக்கு இதை தான் கூறினேன், 40நாட்களிலே கண்கூடான பலன் கிடைத்தது என்று கூறினார்கள்... இன்ஷாஅல்லாஹ் நீங்களும் கடைபிடியுங்கள், இன்ஷாஅல்லாஹ் உங்கள் வறுமை மற்றும் பலா முஸீபத் நீங்க அல்லாஹ் வழி செய்வான்..

படம்

கேள்வி :ஒரு முஃமின் ஒவ்வொரு நொடியும் எப்படி வாழ வேண்டும்...... பதில் : ஒரு முஃமின் அடுத்து நொடி தன் மரணத்தை எதிர் பார்த்தவனாக வாழ வேண்டும்.... ஏனெனில் அடுத்த நொடி மரணிக்க போகும் மனிதனுக்கு எந்த ஆசையும் இருக்காது, அவன் கர்வம் கொள்ள மாட்டான்... இறைவனிடத்தில் தன் பாவங்களுக்கு மன்னிப்பு கோரியவனாக இருப்பான்... குர்ஆனில் கூறப்பட்டது போன்று, ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.... மரணத்தை வென்றவர்கள் உலகில் இல்லை.... அல்லாஹுவும் அவனுடைய தூதரும் கூறியது போன்று நன்மைகள் செய்து எல்லாரும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஐ அடைய ஏக இறைவன் நல்லருள் புரிவானாக.... ஆமீன்...

படம்

கேள்வி : பெண்கள் வீட்டில் வேலை செய்து கொண்டே, அதாவது பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் போதும், வீடு கூட்டி பெருக்கும் போதும் திக்ர் செய்யலாமா? பதில் : பொதுவாக அரச குடும்பத்து ஆண்கள் மட்டுமே புனித காபாஹ் வை சுத்தம் செய்வார்கள்.. ஒரு பெண் அவள் அரச குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் சரி, ஷரியத் தின் சில காரணங்களுக்காக அவர்களுக்கு அனுமதி இல்லை... எனவே, பெண்கள் வீட்டு வேலைகளை செய்யும் போது திக்ர் செய்வது புனித காபாஹ் வை சுத்தம் செய்ததற்கு சமமாக அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான் என்று சில உலமாக்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.. எனவே, பெண்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டே, திக்ர் செய்யலாம்.... நபி (ஸல் ) அவர்களின் ஹதீஸ் இன்னமல் ஆமாலு பின்னிய்யாத், (INNAMAL AAMAALU BINNIYAATH ), [செயல்கள் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது ] உங்கள் எண்ணங்களை அல்லாஹ் நன்கறிவான்.. உங்களுக்கு ஏற்ற நற்கூலி வழங்குவான்.. இன்ஷாஅல்லாஹ்....

படம்